/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : மே 29, 2025 12:37 AM
சென்னை, சேலம் சூரமங்கலத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வீட்டிற்கு, இம்மாதம் 25ம் தேதி, மர்ம நபர்களிடம் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து, வீடு முழுதும் மோப்ப நாய் உதவியுடன், போலீசார் சோதனை செய்தனர்.
அதேபோல், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள பழனிசாமி வீட்டிலும், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். எந்த வெடிப் பொருட்களும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இந்நிலையில், தமிழக டி.ஜி.பி., அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கும், சட்டம் மற்றும் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கும், நேற்று முன்தினம் இரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது.
அதில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எதிர் கட்சித் தலைவர் பழனிசாமி வீட்டில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்ட இருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கப் போவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து, பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள், நேற்று முன்தினம் இரவு மோப்பநாயுடன் சோதனை நடத்தினர்.
இதில், எந்தவித வெடிப் பொருட்களும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
***
சரக்கு விமானத்துக்கு
வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, மே 29-
சீனாவில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வரும் சரக்கு விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக, நேற்று முன்தினம் மாலை இ - மெயில் வந்தது.
அந்த சரக்கு விமானம், சீனாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தது. இதையடுத்து, மும்பை விமான நிலைய அதிகாரிகள், சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில், பாதுகாப்பு கூட்டம் நடந்தது. சரக்கு விமானங்கள் கையாளும் பகுதியில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுவினர், அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.
மிரட்டல் வந்த விமானத்தை முழுதும் சோதித்து பார்த்தனர். ஆனால், அதில் வெடிகுண்டு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
இது வழக்கமான புரளி என்பதை உறுதி செய்தனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இது குறித்து விசாரிக்கின்றனர்.