/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஏரியில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்பு ஏரியில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்பு
ஏரியில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்பு
ஏரியில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்பு
ஏரியில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்பு
ADDED : ஜூலை 02, 2025 11:58 PM
படப்பை: செரப்பணஞ்சேரி ஏரியில் மூழ்கி மாயமான இளைஞர், சடலமாக மீட்கப்பட்டார்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாறன், 21. இவர், நேற்று முன்தினம் மாலை படப்பை அடுத்த செரப்பணஞ்சேரி ஏரியில், நண்பர்களுடன் மாறன் குளித்தார். அப்போது, நீரில் மூழ்கி மாயமானார்.
படப்பை தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமாகியதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இரண்டாவது நாளாக நேற்று தேடும் பணி நடந்தது. மதியம் 1:00 மணியளவில் மாறன் உடல் மீட்கப்பட்டது. மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.