Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ முட்புதரில் வாலிபர் சடலம் மீட்பு 

முட்புதரில் வாலிபர் சடலம் மீட்பு 

முட்புதரில் வாலிபர் சடலம் மீட்பு 

முட்புதரில் வாலிபர் சடலம் மீட்பு 

ADDED : ஜூன் 26, 2025 11:56 PM


Google News
திருவேற்காடு :திருவேற்காடு, செல்வ கணபதி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி, 45; கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. மதுவிற்கு அடிமையான தண்டபாணி, வீட்டில் இருந்த பொருட்களை விற்று மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இதை, அவரது அண்ணன்சண்முகம் மற்றும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் கோபித்து கொண்டு, வீட்டில் இருந்து சென்ற தண்டபாணி, அதன் பின் வீட்டுக்கு வரவில்லை.

இந்நிலையில், கிரீன் பார்க், இரண்டாவது பிரதான சாலை பின்புறம் உள்ள முட்புதரில், கழுத்தில் ரத்த காயங்களுடன் நேற்று மாலை தண்டபாணி இறந்து கிடந்தார்.

திருவேற்காடு போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், அவரது உடலில் நாய் கடித்ததற்கான தடயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

பிரேத பரிசோதனைக்கு பின் தான், இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என, போலீசார் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us