/உள்ளூர் செய்திகள்/சென்னை/இ.எஸ்.ஐ.சி., மருத்துவமனைக்கு உடல் தானம்இ.எஸ்.ஐ.சி., மருத்துவமனைக்கு உடல் தானம்
இ.எஸ்.ஐ.சி., மருத்துவமனைக்கு உடல் தானம்
இ.எஸ்.ஐ.சி., மருத்துவமனைக்கு உடல் தானம்
இ.எஸ்.ஐ.சி., மருத்துவமனைக்கு உடல் தானம்
ADDED : ஜன 11, 2024 01:02 AM
சென்னை, சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ.சி., மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின் உடற்கூறியில் துறையில், தன்னார்வ உடல் தான பிரிவு துவங்க, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை அனுமதி அளித்தது.
தற்போது, தன்னார்வ உடல் தான பிரிவு செயல்பட்டு வரும் நிலையில், சென்னையை சேர்ந்த ராணி, இ.எஸ்.ஐ.சி., மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு உடல் தானம் தர பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை குடும்பத்தினர் நேற்று உடற்கூறியல் துறைக்கு தானம் செய்தனர். இப்பிரிவு துவங்கப்பட்டு, முதல் தன்னார்வ உடல் தானம் கிடைத்துள்ளது.
இந்த உடலை, மருத்துவமனையின் உடற்கூறியியல் துறை, மருத்துவமனை தலைவர், ஊழியர்கள் உள்ளிட்டோர் உரிய மரியாதையுடன் ஏற்றுக்கொண்டதுடன், அக்குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.