/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஒடிஷா பெண்ணிடம் அத்துமீறிய பிஹார் வாலிபர் கைது ஒடிஷா பெண்ணிடம் அத்துமீறிய பிஹார் வாலிபர் கைது
ஒடிஷா பெண்ணிடம் அத்துமீறிய பிஹார் வாலிபர் கைது
ஒடிஷா பெண்ணிடம் அத்துமீறிய பிஹார் வாலிபர் கைது
ஒடிஷா பெண்ணிடம் அத்துமீறிய பிஹார் வாலிபர் கைது
ADDED : செப் 12, 2025 03:08 AM

அம்பத்துார், வீட்டில் தனியாக இருந்த ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட, பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்துார் காவல் சரகத்துக்குட்பட்ட பகுதியில், ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த, 25 வயது இளம்பெண், கணவருடன் வசித்து வருகிறார். இளம்பெண்ணின் கணவர், நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றார். இதனால் வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
இதை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து, அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினார். அந்நேரம் இளம்பெண்ணின் கணவர் வீட்டிற்கு வர, வாலிபர் தப்பி ஓடினார்.
இது தொடர்பாக, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசில் இளம்பெண் நேற்று அதிகாலை புகார் அளித்தார்.
பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார், இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய, பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார், 22, என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.