ADDED : ஜன 29, 2024 01:20 PM

சென்னை: பத்மஸ்ரீ ஸ்ரீமதி மீனாட்சி சித்தரஞ்சனின் சிஷ்யை ஸ்ரீசம்வ்ருதா ஸ்ரீதரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பாரதிய வித்யா பவனில், 'போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் நலச்சங்கம்' சார்பில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்திய கடற்படை, கமாண்டர் அதிகாரி, மணீஷ் தாக்ரே, தலைமை விருந்தினராகவும், சுங்கம் மற்றும் வரி துறை போதைப்பொருள் தடுப்பு முன்னாள் டைரக்டர் ஜெனரல் டாக்டர் ஸ்ரீகுமார் மேனன் கவுரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
பாரதிய வித்யா பவன் இயக்குனர் கலைமாமணி டாக்டர்.ராமசாமி, விதவைகள் நலச்சங்க பொருளாளர் ராணி ராஜரத்தினம் உள்பட பலர் பங்கேற்றனர்.