/உள்ளூர் செய்திகள்/சென்னை/நகையுடன் ஸ்கூட்டர் பறிமுதல் வங்கி ஊழியர்கள் கைது நகையுடன் ஸ்கூட்டர் பறிமுதல் வங்கி ஊழியர்கள் கைது
நகையுடன் ஸ்கூட்டர் பறிமுதல் வங்கி ஊழியர்கள் கைது
நகையுடன் ஸ்கூட்டர் பறிமுதல் வங்கி ஊழியர்கள் கைது
நகையுடன் ஸ்கூட்டர் பறிமுதல் வங்கி ஊழியர்கள் கைது
ADDED : ஜன 25, 2024 12:28 AM
கொடுங்கையூர்,சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகர், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் அஸ்லாம், 39. அண்ணா நகரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
நேற்று தன் மனைவி பானுவை, கொளத்துாரில் உள்ள பிரசாத் மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க அழைத்து சென்றுள்ளார். ஸ்கூட்டரில், நான்கு லட்சம் ரூபாயை வைத்திருந்தார். ஸ்கேன் எடுப்பதற்காக மனைவியின் 2 சவரன் நகையையும் கழற்றி, பணத்துடன் சேர்த்து ஸ்கூட்டரில் வைத்துள்ளார். திரும்பி வந்த போது, ஸ்கூட்டரை காணவில்லை. புகாரின் படி, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
ஸ்கூட்டரை அஸ்லாம் தனியார் வங்கி கடனில் வாங்கி உள்ளார். அதற்கான தவணையை செலுத்தவில்லை. இதனால் வங்கி ஊழியர்கள் ஸ்கூட்டரை பறிமுதல் செய்ததுடன், அதிலிருந்த நகை, பணத்தையும் திருடியது தெரிய வந்தது.இது தொடர்பாக, மணலியைச் சேர்ந்த அலாவுதீன், 30, கொடுங்கையூரை சேர்ந்த தினேஷ், 43 ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.