/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பொது தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விருது பொது தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விருது
பொது தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விருது
பொது தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விருது
பொது தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விருது
ADDED : ஜூன் 08, 2025 12:14 AM

முடிச்சூர்முடிச்சூர் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஆண்டுதோறும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, நலச்சங்க கூட்டமைப்பு தலைவர் தாமோதரன் தலைமையில், நேற்று மாலை நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக, தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜா பங்கேற்று, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற, 280 மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.
சமூக சேவையாளர்கள், 10 பேருக்கு விருது வழங்கப்பட்டது. கூட்டமைப்பு நிர்வாகிகள், ஊராட்சி செயலர் வாசுதேவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.