/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 72 மாடுகளை ஏலம் விட ஆவடி மாநகராட்சி முடிவு அபராதம் செலுத்த தவறியதால் நடவடிக்கை 72 மாடுகளை ஏலம் விட ஆவடி மாநகராட்சி முடிவு அபராதம் செலுத்த தவறியதால் நடவடிக்கை
72 மாடுகளை ஏலம் விட ஆவடி மாநகராட்சி முடிவு அபராதம் செலுத்த தவறியதால் நடவடிக்கை
72 மாடுகளை ஏலம் விட ஆவடி மாநகராட்சி முடிவு அபராதம் செலுத்த தவறியதால் நடவடிக்கை
72 மாடுகளை ஏலம் விட ஆவடி மாநகராட்சி முடிவு அபராதம் செலுத்த தவறியதால் நடவடிக்கை
ADDED : ஜூலை 02, 2025 12:22 AM

ஆவடி, ஆவடி மாநகராட்சியில், சாலையில் பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளில், 72 மாடுகள் ஏலம் விடப்பட உள்ளது.
ஆவடி மாநகராட்சி ஊழியர்கள், தனியார் அமைப்புடன் சேர்ந்து, மே 23ம் தேதி முதல் மாடு பிடிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜூன் 26ம் தேதி வரை, சி.டி.எச் சாலை, தமிழ்நாடு வீட்டு வசதி சாலை, கோவில்பதாகை, அண்ணனுார், காமராஜர் நகர், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில், ஒன்பது முறை மாடுகள் பிடிக்கப்பட்டன.
இதில், கன்றுக்குட்டி உட்பட 92 மாடுகள் பிடிக்கப்பட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள கோசாலைக்கு அனுப்பி, அங்கு பராமரிக்கப்பட்டு வந்தன.
இதில், அபராதம் செலுத்திய 20 மாடுகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் வாயிலாக, 1.20 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 72 மாடுகளுக்கான அபராதம் செலுத்தப்படவில்லை. அவை, அடுத்த வாரம் ஏலம் விடப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்குள் அபராதம் செலுத்தி மாடுகளை மீட்க, உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.