Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.ஒரு லட்சம் மானியத்தில் 154 மகளிருக்கு ஆட்டோ

ரூ.ஒரு லட்சம் மானியத்தில் 154 மகளிருக்கு ஆட்டோ

ரூ.ஒரு லட்சம் மானியத்தில் 154 மகளிருக்கு ஆட்டோ

ரூ.ஒரு லட்சம் மானியத்தில் 154 மகளிருக்கு ஆட்டோ

ADDED : மே 17, 2025 09:23 PM


Google News
சென்னை:சைதாப்பேட்டையில், 154 மகளிர்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடன் ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சியை, அமைச்சர்கள் சுப்பிரமணியன், கணேசன் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:

மகளிருக்கு வழங்கப்படும் ஆட்டோக்களை, 100 சதவீதம் மகளிரே ஓட்டுவது மிகப்பெரிய தலைமை பண்பை பெற்று தரும்.

மகளிர் உரிமை தொகை திட்டத்தில், 1.15 கோடி பேர் மகிழ்ச்சி அடைக்கின்றனர். மகளிர் விடியல் பயணம், 700 கோடி பயணங்களை நெருங்கி உள்ளது. பெண்களுக்காக ஒரு பொருளாதார புரட்சியே தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் கூறியதாவது:

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்து பலன் பெற்று வருகின்றனர். 1,000 மகளிர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டம், கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. இதுவரை, 545 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ளவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும். மகளிரை தொழில் முனைவோர் ஆகவும், சுயமாக தொழில் செய்து தன்னம்பிக்கை வளர்க்கும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us