/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அசைன்மென்ட்/ ஆயுர்வேத தினம் கொண்டாட்டம் அசைன்மென்ட்/ ஆயுர்வேத தினம் கொண்டாட்டம்
அசைன்மென்ட்/ ஆயுர்வேத தினம் கொண்டாட்டம்
அசைன்மென்ட்/ ஆயுர்வேத தினம் கொண்டாட்டம்
அசைன்மென்ட்/ ஆயுர்வேத தினம் கொண்டாட்டம்
ADDED : செப் 24, 2025 03:37 AM
அரும்பாக்கம், : அரும்பாக்கத்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆயுர்வேத தினம் கொண்டாடப்பட்டது.
மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி குழுமத்தின், கிளை நிறுவனமான கேப்டன் ஸ்ரீனிவாச மூர்த்தி மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம், அரும்பாக்கம், சித்த மருத்துவமனை வளாகத்தில் செயல்படுகிறது. இங்கு 10வது ஆயுர்வேத தினம் கொண்டாடப்பட்டது. கடந்த 12ம் தேதி துவங்கிய நிகழ்ச்சி, நேற்று வரை நடந்தது.
நிறுவனத்தின் பொறுப்பாளரும், உதவி இயக்குனருமான டாக்டர் சித்ரா கூறியதாவது :
இந்தாண்டு, 'மக்கள் மற்றும் புவிக்கான ஆயுர்வேதம்' என்ற தலைப்பில் ஆயுர்வேத தினம் கொண்டாடப்பட்டது. அதில், அதிக எடைக்கு எதிரான ஆயுர்வேத உணவு, டிஜிட்டல் மாற்றம் உள்ளிட்ட துணை தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மூலிகை செடிகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், கட்டுரை, கோலம், அடுப்பிலா சமையல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பெரும்பாக்கத்தில் நடத்திய மருத்துவ முகாமில், 180க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
இறுதி நாளான நேற்று 'புற்றுநோய் சிகிச்சையில் ஆயுர்வேதத்தின் பங்கு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பெண்களுக்கு ஊட்டச்சத்து குறித்து பரிசோதனை செய்து மருந்து வழங்கினோம். ஆயுர்வேத மருத்துவம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இருக்கிறது. பல்வித நோய்களுக்கு, மருத்துகளை முழுமையாக ஆராய்ச்சி செய்து மத்திய அரசுக்கு அனுப்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
--------------------