/உள்ளூர் செய்திகள்/சென்னை/முடிச்சூர் சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் பிடிப்பு: மிரட்டிய 3 பேர் கைதுமுடிச்சூர் சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் பிடிப்பு: மிரட்டிய 3 பேர் கைது
முடிச்சூர் சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் பிடிப்பு: மிரட்டிய 3 பேர் கைது
முடிச்சூர் சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் பிடிப்பு: மிரட்டிய 3 பேர் கைது
முடிச்சூர் சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் பிடிப்பு: மிரட்டிய 3 பேர் கைது
ADDED : ஜன 05, 2024 12:57 AM
பெருங்களத்துார், முடிச்சூர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 12 மாடுகளை, சுகாதார அலுவலர்கள் நேற்று பிடித்தனர். அப்போது, மாநகராட்சி அதிகாரிகளை வேலை செய்ய விடாமல், மிரட்டிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
தாம்பரம் மாநகராட்சியின் நான்காவது மண்டலம், தாம்பரம் - முடிச்சூர் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை, சுகாதார அலுவலர்கள் சிவகுமார், சிவா, மாரிமுத்து ஆகியோர், ஊழியர்களுடன் பிடிக்க சென்றனர்.
தொடர்ந்து 12 மாடுகளை பிடித்து வாகனத்தில் ஏற்றினர். அதில், மூன்று மாடுகளை, அவற்றின் உரிமையாளர்கள் தலா 2,000 ரூபாய் அபராதம் செலுத்தி, எழுதி கொடுத்து, பிடித்து சென்றனர்.
பிபட்ட ஒன்பது மாடுகளை, சிங்கப்பெருமாள் கோவில் அருகேயுள்ள கொண்டமங்கலம் ஊராட்சியில் உள்ள கோசாலைக்கு அனுப்பினர்.
அப்போது, சிலர், சுகாதார அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து, தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. தகராறு செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்து, விசாரிக்கின்றனர்.