Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மயக்க 'ஸ்வீட்' கொடுத்து பஸ்சில் நகை பறித்தோர் கைது

மயக்க 'ஸ்வீட்' கொடுத்து பஸ்சில் நகை பறித்தோர் கைது

மயக்க 'ஸ்வீட்' கொடுத்து பஸ்சில் நகை பறித்தோர் கைது

மயக்க 'ஸ்வீட்' கொடுத்து பஸ்சில் நகை பறித்தோர் கைது

ADDED : மார் 26, 2025 12:38 AM


Google News
தாம்பரம்,

குரோம்பேட்டை, புருஷோத்தம்மன் நகரை சேர்ந்தவர் ஜானகி, 54. கடந்த ஏப்ரல் மாதம், 2ம் தேதி, வேலுாரில் உள்ள தாயை பார்ப்பதற்காக சென்றார்.

அங்கிருந்து, மறுநாள் அரசு பேருந்தில் தாம்பரம் திரும்பினார். அப்போது, அருகே அமர்ந்திருந்த பெண் ஒருவர், ஸ்வீட் கொடுத்துள்ளார்.

அதை சாப்பிட்டதும், ஜானகி மயக்கமடைந்தார். இதற்கிடையில், பேருந்து தாம்பரம் சானடோரியம் வந்துள்ளது.

பேருந்தில் இருந்து இறங்காமல் ஜானகி மயக்கத்திலேயே இருந்ததால், நடத்துனர் அவரது மொபைல் போனில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்துள்ளார்.

அவரது உறவினர்கள் தாம்பரம் வந்து, ஜானகியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மயக்கம் தெளிந்ததும், ஜானகியின் 3 சவரன் செயின், மூன்று சவரன் மோதிரம் திருடப்பட்டது தெரியவந்தது.

அதேபோல், வேளச்சேரியை சேர்ந்தவர் கிரிஜா, 50. இம்மாதம், 3ம் தேதி, வேலுாரில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்ற இவர், அரசு பேருந்தில் திரும்பிய போது, இதேபோல் மயக்க மருந்து கலந்த ஸ்வீட் கொடுத்து, 2 சவரன் செயினை மர்ம பெண் திருடி சென்றார்.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து, தாம்பரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். கண்காணிப்பு கேமராக்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்து, திண்டுக்கல்லை சேர்ந்த பரமேஸ்வரன், 52, நாமக்கல்லை சேர்ந்த ராணி, 54, ஆகிய இருவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.

விசாரணையில், ஆக்டிங் ஓட்டுநராக உள்ள பரமேஸ்வரனுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன், ராணி பழக்கமாகியுள்ளார்.

அதன்பின், இருவரும் திட்டமிட்டு, பேருந்தில் பயணம் செய்யும் மூதாட்டிகளை நோட்டமிட்டு, அவர்களின் அருகே அமர்ந்து, மயக்க மருந்து கலந்த ஸ்வீட் கொடுத்து மயக்கமடைய செய்து, நகைகளை திருடியது தெரியவந்தது.

பல ஆண்டுகளாக இதுபோன்ற திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் மீதும், திருச்சி, பழனி, தாராபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு உள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரிடம் இருந்தும், 10 சவரன் நகையை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us