/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சி.எஸ்.ஐ.ஆர்., ஆய்வு கூடங்கள் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு சி.எஸ்.ஐ.ஆர்., ஆய்வு கூடங்கள் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு
சி.எஸ்.ஐ.ஆர்., ஆய்வு கூடங்கள் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு
சி.எஸ்.ஐ.ஆர்., ஆய்வு கூடங்கள் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு
சி.எஸ்.ஐ.ஆர்., ஆய்வு கூடங்கள் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு
ADDED : செப் 26, 2025 12:35 AM
சென்னை :தரமணி, சி.எஸ்.ஐ.ஆர்., வளாகத்தில் உள்ள ஆய்வுக்கூடங்களை, பொதுமக்கள் இன்று பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்., என்ற மத்திய கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஆனந்தவள்ளி கூறியதாவது:
எங்கள் நிறுவனம், முறுக்கு இரும்பு கம்பி, தேர்தலுக்கு பயன்படுத்தும் மை, ரயில் தண்டவாள சிமென்ட் கட்டைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கண்டுபிடித்துள்ளது.
தற்போது, 3டி தொழில்நுட்ப கட்டடம், பழைய கட்டட கழிவுகளை மறுசுழற்சி அடிப்படையில் புதிய கட்டடத்திற்கு பயன்படுத்துவது, பாம்பன் ரயில் பாலத்தின் உறுதித்தன்மையை பரிசோதிப்பது, விபத்தை தடுக்க ஓட்டுநர்களின் துாக்கத்தை கண்டறிந்து எச்சரிக்கும் கருவி தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
இதற்கான, 15க்கும் மேற்பட்ட ஆய்வுக் கூடங்கள் இங்கு உள்ளன. இந்த ஆய்வுக்கூடங்களை பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், ஆராய்ச்சியில் ஈடுபடுவோர், செப்., 26 காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பார்வையிடலாம். இதன் பயன்பாடு, செயலாக்கம் குறித்து, ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளிப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.