/உள்ளூர் செய்திகள்/சென்னை/நீங்கள் கிரிக்கெட் வீராங்கனையா? 25ல் தேர்வு முகாம்நீங்கள் கிரிக்கெட் வீராங்கனையா? 25ல் தேர்வு முகாம்
நீங்கள் கிரிக்கெட் வீராங்கனையா? 25ல் தேர்வு முகாம்
நீங்கள் கிரிக்கெட் வீராங்கனையா? 25ல் தேர்வு முகாம்
நீங்கள் கிரிக்கெட் வீராங்கனையா? 25ல் தேர்வு முகாம்
ADDED : ஜூன் 15, 2025 08:16 PM
சென்னை:தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு சார்பில், 19 வயதிற்கு உட்பட்ட் மகளிர் அணிக்கான தேர்வு முகாம், வரும் ஜூன் 25ம் தேதி, சென்னை, எம்.ஏ., சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.
இதற்கான முன்பதிவை, அந்த சங்கம் துவங்கியுள்ளது. இதில், 2010 செப்., 1 முதல் 2013 ஆக., 31ம் தேதி வரை அல்லது அதற்கு முன் பிறந்த மாணவியர் மட்டும் பங்குபெறலாம் என, அந்தச் சங்கம் அறிவித்திருக்கிறது.
பங்கேற்க விரும்பும் வீராங்கனையர் www.tnca.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்ய ஜூன் 21ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.