ADDED : ஜூலை 04, 2025 08:33 AM
சென்னை: ஒருங்கிணைந்த பொறியியல் பணி தேர்வு வாயிலாக, உதவி பொறியாளர் பணியிடத்திற்கு, அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வாயிலாக, 169 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு நீர்வளத் துறையில் உதவி பொறியாளர் பணி வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கான பணி நியமன உத்தரவுகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.