Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வடபழனி முருகன் கோவிலில் ஓதுவார் பயிற்சிக்கு விண்ணப்பம்

வடபழனி முருகன் கோவிலில் ஓதுவார் பயிற்சிக்கு விண்ணப்பம்

வடபழனி முருகன் கோவிலில் ஓதுவார் பயிற்சிக்கு விண்ணப்பம்

வடபழனி முருகன் கோவிலில் ஓதுவார் பயிற்சிக்கு விண்ணப்பம்

ADDED : செப் 14, 2025 02:47 AM


Google News
சென்னை,:வடபழனி முருகன் கோவிலில் துவக்கப்படவுள்ள ஓதுவார் பயிற்சிப் பள்ளியில், பகுதிநேர வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை, வடபழனியில் உள்ள முருகன் கோவில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக ஓதுவார் பயற்சிப் பள்ளி, பகுதி நேர வகுப்பாக துவக்கப்படுகிறது. இதன் பயிற்சி காலம் நான்கு ஆண்டுகள்.

காலை 6:00 மணி முதல் காலை 8:00 மணி வரை; இரவு 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடத்தப்பட உள்ளது. தவிர, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர வகுப்பும் நடத்தப்பட உள்ளது.

விருப்பமுள்ளோர் 14 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஹிந்து மதத்தை சேர்ந்தவராகவும், சமயக் கோட்பாடுகளை கடைபிடிப்பவராகவும் இருக்க வேண்டும். பயிற்சியில் சேர்வோருக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

வடபழனி முருகன் கோவிலில் நேரிலோ, ஹிந்து சமய அறநிலையத்துறையின் www.tnhrce.gov.in மற்றும் www.vadapalaniandavar.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலோ விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் வரும் அக்., 13ம் தேதிக்குள் துணைக் கமிஷனர், செயல் அலுவலர், வடபழனி முருகன் கோவில், வடபழனி - 26 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறநிலையத் துறை அறிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us