/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின்சார பைக்கால் தீ மேலும் ஒருவர் இறப்பு மின்சார பைக்கால் தீ மேலும் ஒருவர் இறப்பு
மின்சார பைக்கால் தீ மேலும் ஒருவர் இறப்பு
மின்சார பைக்கால் தீ மேலும் ஒருவர் இறப்பு
மின்சார பைக்கால் தீ மேலும் ஒருவர் இறப்பு
ADDED : மார் 22, 2025 12:11 AM
சென்னை, மதுரவாயல் பாக்கியலட்சுமி நகர், அன்னை இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் கவுதம், 31; தனியார் நிறுவன ஊழியர்.
கடந்த, 15ம் தேதி, வீட்டு போர்டிகோவில் நிறுத்தி, 'சார்ஜ்' போட்டிருந்த மின்சார வாகனம் தீப்பற்றி எரிந்தது.
அதில் சிக்காமல் இருக்க, கவுதம், அவரது மனைவி மஞ்சு, 9 மாத கைக்குழந்தை எழிலரசி ஆகியோர், வெளியேற முயன்றனர். இதில் மூவருக்கும் தீக்காயம் ஏற்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு, சிகிச்சையில் இருந்த, 9 மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி, மறுநாள் இறந்தது. இந்நிலையில், நேற்று காலை, சிகிச்சை பலனின்றி கவுதம் உயிரிழந்தார்.