/உள்ளூர் செய்திகள்/சென்னை/நிறுத்தம் மாறி ஏற சொன்னதால் ஆத்திரம் டிராவல்ஸ் நிறுவனத்தை சூறையாடிய பயணிநிறுத்தம் மாறி ஏற சொன்னதால் ஆத்திரம் டிராவல்ஸ் நிறுவனத்தை சூறையாடிய பயணி
நிறுத்தம் மாறி ஏற சொன்னதால் ஆத்திரம் டிராவல்ஸ் நிறுவனத்தை சூறையாடிய பயணி
நிறுத்தம் மாறி ஏற சொன்னதால் ஆத்திரம் டிராவல்ஸ் நிறுவனத்தை சூறையாடிய பயணி
நிறுத்தம் மாறி ஏற சொன்னதால் ஆத்திரம் டிராவல்ஸ் நிறுவனத்தை சூறையாடிய பயணி
ADDED : செப் 04, 2025 08:39 AM
சென்னை: முன்பதிவு செய்த ஆம்னி பேருந்தில் ஏற, வேறு இடத்திற்கு வர சொன்னதால் ஆத்திரமடைந்த கேரள பயணி, தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தை சூறையாடியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கேரளம் மாநிலம், இளங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் ஜான், 30. இவர், தான் படித்த சென்னை, திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியை பார்ப்பதற்காக, நேற்று முன்தினம் காலை வந்தார்.
பின், நண்பரை பார்க்க பெங்களூரு செல்வதற்காக, கோயம்பேடில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில், மொபைல் செயலி மூலம், மின்சார பேருந்தை முன்பதிவு செய்துள்ளார்.
அன்று இரவு, பேருந்து ஏறுவதற்காக, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரை தொடர்பு கொண்ட 'புக்கிங்' அலுவலக ஊழியர்கள், ரோகிணி திரையரங்கம் அருகில் நின்று, பேருந்தில் ஏறிக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த பிரான்சிஸ் ஜான், புக்கிங் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். பின், அங்கிருந்த மின் சாதன பொருட்களை அடித்து உடைத்து சூறையாடியுள்ளார்.
பின், ஆட்டோ மூலம், ரோகினி திரையரங்கம் சென்று, முன்பதிவு செய்திருந்த மின்சார பேருந்தில் ஏறிச் சென்றார். இச்சம்பவம் குறித்து, புக்கிங் அலுவலக ஊழியர்கள், ஆம்னி பேருந்து ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர்.
பேருந்தை, மதுரவாயல் அருகில் நிறுத்திய ஓட்டுநர், பிரான்சிஸ் ஜானை, கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தனர். இருதரப்பினரிடம், கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.