அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 06, 2024 12:35 AM
பெரம்பூர் :மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், அங்கன்வாடி திட்டத்திற்கு நிதி மற்றும் சேவைகளை கூடுதலாக உயர்த்தி அறிவிக்காததை கண்டித்து, பெரம்பூர், வீனஸ் நகர் மற்றும் பெரவள்ளூர் சிவா இளங்கோ சாலையில், அங்கன்வாடி பணியாளர்கள், நேற்று மாலை திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.