ADDED : ஜன 07, 2024 12:28 AM
சென்னை புத்தக காட்சி, தங்களுக்கு ஊக்கம் தருவதாக, பதிப்பகத்தினர் தெரிவித்துள்ளனர்.
ராஜபாளையம், 'மகிழன்' பதிப்பாளர் அருணாசலம், 50, கூறுகையில், ''விளையாட்டுத் துறை சார்ந்து, 20 புத்தகங்களை நானே தொகுத்து வெளியிட்டு உள்ளேன். மற்ற எழுத்தாளர்களின் 40 புத்தகங்களையும் வெளியிட்டுள்ளேன். ஐந்தாவது ஆண்டாக அரங்கு அமைத்து உள்ளேன். என் போன்ற மாற்றுத்திறனாளி பதிப்பகத்தாருக்கு, இந்த புத்தக காட்சி ஊக்கம் தருகிறது,'' என்றார்.
திருப்பூர் அம்பிகா, 40, கூறுகையில், ''சென்னை புத்தகச் சந்தையில் முதல் முறையாக அரங்கு அமைத்துள்ளேன். 'வேரல் புக்ஸ்' துவங்கி 18 மாதமாகிறது.
பதிப்புத் துறைக்கு பெண்கள் அதிக அளவில் வரவேண்டும். தவிர, இது போன்ற புத்தகச் சந்தையில், பெண் பதிப்பாளர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டும்,'' என்றார்.
- நமது நிருபர் -