கழிவுநீர் பிரச்னைக்கு மாற்று ஏற்பாடு
கழிவுநீர் பிரச்னைக்கு மாற்று ஏற்பாடு
கழிவுநீர் பிரச்னைக்கு மாற்று ஏற்பாடு
ADDED : ஜன 08, 2024 01:47 AM
சென்னை:அடையாறு எல்.பி., சாலையில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதனால், 9 மற்றும் 10ம் தேதிகளில் தேனாம்பேட்டை, அடையாறு மண்டலத்தில், இயந்திர நுழைவு வாயில் வழியாக கழிவுநீர் வெளியேற வாய்ப்புள்ளது.
அப்படி ஏற்பட்டால், கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் கொண்டு கழிவுநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
தேனாம்பேட்டை மண்டலத்தில், 81449 30909 என்ற எண்ணிலும், அடையாறு மண்டலத்தில், 81449 30913 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என, அதிகாரிகள் கூறினர்.