/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நெற்குன்றத்தில் 140 மின் கம்பங்கள் மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டு நெற்குன்றத்தில் 140 மின் கம்பங்கள் மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டு
நெற்குன்றத்தில் 140 மின் கம்பங்கள் மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டு
நெற்குன்றத்தில் 140 மின் கம்பங்கள் மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டு
நெற்குன்றத்தில் 140 மின் கம்பங்கள் மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 13, 2025 12:28 AM
கோயம்பேடு, வளசரவாக்கம் மண்டலத்தில் 145 மற்றும் 148வது வார்டுகளில் 140க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் பழுதடைந்துள்ளன. எந்நேரம் வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் உள்ள இந்த கம்பங்களை மாற்றி அமைக்க, பலதரப்பினரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், அவற்றை மாற்றாமல், மின் வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
பருவமழைக்கு முன் சிதிலமடைந்த மின் கம்பங்கள் அனைத்தையும் மாற்றி அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெற்குன்றத்தைச் சேர்ந்த எம்.வெங்கடேஷன், 51, என்பவர் கூறியதாவது:
இப்பகுதியில் மின் கம்பங்கள் பல மிகவும் சேதமடைந்துள்ளன. மின் கம்பிகளும் தாழ்வாக தொங்குவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அதேபோல், பல வீடுகளுக்கு மும்முனை மின் இணைப்பு வழக்கப்பட்டுள்ளது. அதற்கு, மின் கம்பத்தில் நான்கு முதல் ஐந்து கம்பிகள் இருக்க வேண்டும். ஆனால் நெற்குன்றத்தில் இரு மின் கம்பிகள் மட்டுமே உள்ளன. அதற்கு, மும்முனை இணைப்பு என கணக்கு காட்டுகின்றனர். இதுகுறித்து பல முறை புகார் அளித்தும், மின் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.