/உள்ளூர் செய்திகள்/சென்னை/அகில இந்திய பெண்கள் பேட்மின்டன் கோல்கட்டா அடாமாஸ் 'சாம்பியன்'அகில இந்திய பெண்கள் பேட்மின்டன் கோல்கட்டா அடாமாஸ் 'சாம்பியன்'
அகில இந்திய பெண்கள் பேட்மின்டன் கோல்கட்டா அடாமாஸ் 'சாம்பியன்'
அகில இந்திய பெண்கள் பேட்மின்டன் கோல்கட்டா அடாமாஸ் 'சாம்பியன்'
அகில இந்திய பெண்கள் பேட்மின்டன் கோல்கட்டா அடாமாஸ் 'சாம்பியன்'
ADDED : ஜன 11, 2024 01:47 AM

சென்னை,அகில இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், அகில இந்திய பெண்கள் பேட்மின்டன் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துாரில் நடந்தது.
போட்டியில், நாடு முழுதும் தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு மண்டலங்களில் இருந்து மொத்தம், 16 பல்கலை அணிகள் பங்கேற்றன. 'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' முறையில், தனி நபர், இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
நேற்று நடந்த இறுதிப் போட்டியில், கோல்கட்டா அடாமாஸ் பல்கலை மற்றும் ராஜஸ்தான் ஸ்ரீ ஜகதீஷ் பிரசத் ஜபர்மல் திப்ரேவாலா பல்கலை அணிகள் மோதின. அதில், 2 - 1 கணக்கில் கோல்கட்டா அடாமாஸ் பல்கலை அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது.
முன்னதாக நடந்த மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில், பெங்களூரு ஜெயின் பல்கலை மற்றும் சென்னை எஸ்.ஆர்.எம்., அணிகள் மோதின. விறுவிறுப்பான ஆட்டத்தில், 2 - 1 கணக்கில் ஜெயின் பல்கலை வெற்றி பெற்று, மூன்றாம் இடத்தை தட்டிச் சென்றது.