/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மும்பையில் இருந்து புறப்பட்ட 'ஏர் இந்தியா' விமானம் 'மக்கர்' மும்பையில் இருந்து புறப்பட்ட 'ஏர் இந்தியா' விமானம் 'மக்கர்'
மும்பையில் இருந்து புறப்பட்ட 'ஏர் இந்தியா' விமானம் 'மக்கர்'
மும்பையில் இருந்து புறப்பட்ட 'ஏர் இந்தியா' விமானம் 'மக்கர்'
மும்பையில் இருந்து புறப்பட்ட 'ஏர் இந்தியா' விமானம் 'மக்கர்'
ADDED : ஜூன் 29, 2025 12:12 AM

சென்னை, மும்பையில் இருந்து சென்னை புறப்பட்ட 'ஏர் இந்தியா' விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, பயணியர் மாற்று விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மும்பையில் இருந்து சென்னைக்கு, நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு, 'ஏர் இந்தியா' விமானம் புறப்பட்டது.
ஓடுபாதையில் இருந்து சிறிது துாரத்தில், விமானம் வானில் பறக்க துவங்கியபோது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதற்கான எச்சரிக்கை 'அலாரம்' அடித்தது.
இதையடுத்து விமானி, மும்பை விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு, அவசரமாக தகவல் தந்தார். அவர்கள் விமானத்தை உடனடியாக தரையிறக்கும்படி அறிவுறுத்தினர். பின் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
விமான பொறியாளர்கள் குழு கோளாறு சரி செய்யும் பணியில் இறங்கினர். குறித்த நேரத்தில் இயந்தி கோளாறை சரி செய்ய முடியவில்லை.
இதையடுத்து விமான நிறுவனம் மாற்று விமானத்தை ஏற்பாடு செய்தது. அதிகாலை 4:35 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்ட விமானம், காலை 6:05 மணிக்கு, சென்னை விமான நிலையம் வந்து தரையிறங்கியது. இச்சம்பவம் பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.