Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 9ம் தேதி திருப்போரூரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் 

9ம் தேதி திருப்போரூரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் 

9ம் தேதி திருப்போரூரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் 

9ம் தேதி திருப்போரூரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் 

ADDED : ஜூலை 05, 2025 12:44 AM


Google News
சென்னை, 'தி.மு.க., அரசை கண்டித்து, வரும் 9ம் தேதி, திருப்போரூரில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டசபை தொகுதியில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாததால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். திருப்போரூரில், அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், தி.மு.க., ஆட்சியில் படவட்டம்மன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், குமரன் நகர், மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில் நிறைவேற்றப்படவில்லை.

அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்த திருப்போரூர் அரசு மருத்துவமனையில், இப்போது, 'எக்ஸ் - ரே மிஷின்' சரியாக செயல்படுவதில்லை. 'ஸ்கேன்' வசதி, அவசர சிகிச்சை பிரிவு, போதிய டாக்டர்கள் இல்லை. இதனால், 30 கி.மீ., துாரத்தில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலைகளை இணைக்கும் திருப்போரூர் - -நெம்மேலி சாலை, ஒருவழி சாலையாக இருப்பதால், போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இதை நான்கு வழிச்சாலையாக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இதற்கு காரணமான தி.மு.க., அரசைக் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், வரும் 9ம் தேதி புதன் கிழமை காலை 10:00 மணிக்கு, திருப்போரூர் பேரூராட்சி மன்ற அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us