/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குப்பை எரி உலைக்கு எதிராக அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் குப்பை எரி உலைக்கு எதிராக அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
குப்பை எரி உலைக்கு எதிராக அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
குப்பை எரி உலைக்கு எதிராக அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
குப்பை எரி உலைக்கு எதிராக அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 03, 2025 12:19 AM

கொடுங்கையூர், கொடுங்கையூர் குப்பை கிடங்கில், எரி உலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்; மக்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் என, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த திட்டத்தை கைவிடக்கோரியும், கொருக்குப்பேட்டை, எழில் நகரில் நடந்து வரும் மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரியும், ஆர்.கே.நரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரியும், அ.தி.மு.க., சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தண்டையார்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க., மகளிரணி செயலரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி, வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலர் ராஜேஷ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
எரி உலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நிர்வாகிகள் கழுத்தில் மண்டை ஓடு அணிந்திருந்தனர். அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.