/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னையில் 20,000 போலி வாக்காளர்கள் கலெக்டரிடம் அ.தி.மு.க., மனு சென்னையில் 20,000 போலி வாக்காளர்கள் கலெக்டரிடம் அ.தி.மு.க., மனு
சென்னையில் 20,000 போலி வாக்காளர்கள் கலெக்டரிடம் அ.தி.மு.க., மனு
சென்னையில் 20,000 போலி வாக்காளர்கள் கலெக்டரிடம் அ.தி.மு.க., மனு
சென்னையில் 20,000 போலி வாக்காளர்கள் கலெக்டரிடம் அ.தி.மு.க., மனு
ADDED : செப் 13, 2025 12:54 AM
சென்னை, சென்னையில் அனைத்து தொகுதியிலும் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டி, அ.தி.மு.க.,வின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர் கோவை சத்யன், சென்னை கலெக்டர் ரஷ்சி சித்தார்த் ஜகடேவிடம், நேற்று மனு அளித்தனர்.
பின், தி.நகரில் அவர் அளித்த பேட்டி:
சென்னையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், மொத்தம் 220ல், 15 ஓட்டுச்சாவடி வாக்காளர்களை சரிபார்த்ததில் 1,722 வாக்காளர்கள் பெயரில் குளறுபடி உள்ளது. அதில், 553 பேர் இறந்துள்ளனர்; 1,136 பேர் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்துள்ளனர்; 33 பெயர்கள் இரு இடங்களில் உள்ளன.
அதேபோல் ஆயிரம் விளக்கு தொகுதியில், 39 ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்ததில் 1,644 வேட்பாளர்கள் பெயரில் குளறுபடி உள்ளது. இரு தொகுதியில் இவ்வளவு குளறுபடிகள் இருந்தால், 232 தொகுதியில் எப்படி இருக்கும்.
சென்னையில் ஒவ்வொரு தொகுதியிலும், 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை போலி வாக்காளர்கள் உள்ளனர். அனைத்தும் தி.மு.க.,வின் கள்ள ஓட்டுக்கு உதவும்.
இவ்வாறு அவர் கூறினர்.