Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/தாலுகா நீதிமன்ற பணி அதிகாரிகள் ஆலோசனை

தாலுகா நீதிமன்ற பணி அதிகாரிகள் ஆலோசனை

தாலுகா நீதிமன்ற பணி அதிகாரிகள் ஆலோசனை

தாலுகா நீதிமன்ற பணி அதிகாரிகள் ஆலோசனை

ADDED : ஜன 29, 2024 01:44 AM


Google News
சென்னை:சோழிங்கநல்லுார் எல்லையில் உள்ள நீலாங்கரை, துரைப்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரி ஆகிய காவல் நிலைய வழக்குகள் மற்றும் உரிமையியல் வழக்குகளும் ஆலந்துார் நீதிமன்றத்தில் நடக்கின்றன.

இந்நிலையில், சோழிங்கநல்லுாரில் நீதிமன்றம் திறக்க, இடம் தேர்வு இரண்டு ஆண்டுகளாக நடந்தது. சோழிங்கநல்லுார் மண்டலம், 199வது வார்டு, நெடுஞ்செழியன் தெருவில், மாநகராட்சி சார்பில் இரவு காப்பகம் கட்டப்பட்டது.

இக்கட்டடம் பயன்பாட்டுக்கு வர இருந்த நிலையில், பொதுப்பணித் துறை கோரிக்கையை ஏற்று, சோழிங்கநல்லுார் நீதிமன்றத்திற்கு கட்டடத்தை வழங்க, மாநகராட்சி முடிவு செய்தது.

சென்னை உயர் நீதிமன்றம், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், அக்கட்டடத்தை பார்வையிட்டனர். குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றமாக செயல்பட உள்ளதால், அதற்கான கட்டமைப்புடன் வடிவமைக்க, மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தனர்.

நீதிபதி அறை, அலுவலகம், ஆவண பாதுகாப்பு அறை உள்ளிட்ட வசதிகளுடன் நீதிமன்றம் அமைகிறது. வரும் ஜூன் மாதம் முதல், சோழிங்கநல்லுார் நீதிமன்றம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us