/உள்ளூர் செய்திகள்/சென்னை/போதைக்கு மாத்திரை வாலிபர்களுக்கு 'காப்பு'போதைக்கு மாத்திரை வாலிபர்களுக்கு 'காப்பு'
போதைக்கு மாத்திரை வாலிபர்களுக்கு 'காப்பு'
போதைக்கு மாத்திரை வாலிபர்களுக்கு 'காப்பு'
போதைக்கு மாத்திரை வாலிபர்களுக்கு 'காப்பு'
ADDED : ஜன 05, 2024 12:23 AM

தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோவில் தெரு சந்திப்பில், போதை வஸ்துக்கள் வினியோகம் நடப்பதாக, நேற்று முன்தினம் இரவு, வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தனிப்படை உதவி ஆய்வாளர் பிரவீன் குமார் தலைமையிலான போலீசார், அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
இதில், தண்டையார்பேட்டை, சிவாஜி நகரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், 22, என்பது தெரிய வந்தது. சோதனையில் 621 'நைட்ரோவிட்' மாத்திரைகள் சிக்கின. மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தியது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இவருக்கு, மணலி, சி.பி.சி.எல்., நகரைச் சேர்ந்த ஸ்டீபன், 23, என்பவர், வர்த்தக வலைதளம் வாயிலாக, போதை மாத்திரைகளை 'ஆர்டர்' செய்து வாங்கி கொடுத்துள்ளார்.
அவரையும் கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.