/உள்ளூர் செய்திகள்/சென்னை/சாலையில் ரயில் பாகங்கள் சரிந்து விழுந்து விபத்துசாலையில் ரயில் பாகங்கள் சரிந்து விழுந்து விபத்து
சாலையில் ரயில் பாகங்கள் சரிந்து விழுந்து விபத்து
சாலையில் ரயில் பாகங்கள் சரிந்து விழுந்து விபத்து
சாலையில் ரயில் பாகங்கள் சரிந்து விழுந்து விபத்து
ADDED : ஜன 01, 2024 01:42 AM

செங்குன்றம்:சென்னை ஐ.சி.எப்., ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு, 20 டன் எடை கொண்ட, ரயில் பெட்டி இணைப்பிற்கான பாகங்கள், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து, 'டிரெய்லர்' லாரியில் கொண்டு வரப்பட்டன.
லாரியை நகுல்சிங், 32, என்பவர் ஓட்டி வந்தார்.
நேற்று முன்தினம், சென்னை, புழல் அடுத்த காவாங்கரை மாரியம்மாள் நகர் அருகே உள்ள தனியார் வாகன நிறுத்தத்தில், அந்த லாரி நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு, வாகன போக்குவரத்து குறைந்த பிறகு, இரவு 11:00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டது.
வெளியே வந்த போது, சமதளமற்ற சாலை காரணமாக, அந்த லாரி அணுகு சாலையில் திரும்பும் போது, பாரம் தாங்காமல், இணைப்பு பாகங்கள் கட்டப்பட்டிருந்த சங்கிலி அறுந்தது.
இதில், 4 டன் எடை கொண்ட, நான்கு இணைப்பு பாகங்கள் சாலையில் விழுந்தன.
அதனால், தேசிய நெடுஞ்சாலையின் தடுப்பு சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில், போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாததால், பெரும் விபத்து, உயிரிழப்பு போன்ற அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனால், அணுகு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதன் பின் நேற்று மதியம், 'கிரேன்' உதவியுடன், சாலையில் விழுந்த பாகங்கள் மீண்டும் லாரியில் ஏற்றப்பட்டதும், போக்குவரத்து சீரானது. விபத்து குறித்து, மாதவரம் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.