ADDED : மே 21, 2025 12:54 AM
புரசைவாக்கம், சென்னை தலைமைச் செயலக காலனி போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், புரசைவாக்கம், பிரிக்ளின் சாலையில் உள்ள தனியார் ரெஸ்டாரன்டில், கடந்த 14ம் தேதி, சோதனை நடத்தப்பட்டது.
அதில், அங்கு தனி அறை ஏற்படுத்தி, தடை விதிக்கப்பட்ட புகையிலை கலந்த ஹுக்கா புகைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
இதையடுத்து, ரெஸ்டாரன்ட் நடத்திய மாதவரத்தை சேர்ந்த மனோஜ், 52, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 30 கிலோ புகையிலை கலந்த ஹுக்கா, 5 கிலோ ஹுக்கா மசாலா உள்ளிட்டவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இதில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளியான, மாதவரத்தை சேர்ந்த சந்தீப், 24, என்பவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.