ADDED : ஜன 19, 2024 12:12 AM
சென்னை, காஷ்மீரின் பெருமைகளை விளக்கும், 96வது விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாளை இரவு, 'ஆச்சார்யா அபினவகுப்தா'எனும் தலைப்பில், உபன்யாசகரும், கோவில் கட்டடக்கலை வரலாற்று ஆய்வாளருமான சீதாராமனின் சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது.
இந்நிகழ்ச்சி, மாத்யம தர்ம சமாஜத்தின், 'யு -டியூப்' சேனலில் நாளை இரவு 7:00 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பாகிறது. மாத்யம தர்ம சமாஜத்தின், https://www.youtube.com /channel/UC---cWDkmwuK1iuL2nkED 5bcA மற்றும் காமகோடி டிவி, காஞ்சி காமகோடி முகநுால், காஞ்சி காமகோடி 'யு- டியூப், காஞ்சி மடத்தின் எக்ஸ் சமூகவலைதள பக்கத்திலும் பார்க்க முடியும்.


