/உள்ளூர் செய்திகள்/சென்னை/காதலிக்குமாறு பெண்ணை மிரட்டிய வாலிபர் கைதுகாதலிக்குமாறு பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
காதலிக்குமாறு பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
காதலிக்குமாறு பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
காதலிக்குமாறு பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
ADDED : பிப் 06, 2024 12:28 AM
பெரம்பூர், வியாசர்பாடியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் மகள், பிளஸ் 2 படித்து வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், வியாசர்பாடியைச் சேர்ந்த கார்த்திகேயனின் மகன் அஸ்வின், 19, என்பவர், அப்பெண்ணுடன் நட்பாக பழக்கமாகி உள்ளார்.
நாளடைவில் அஸ்வினின் நடத்தை சரியில்லாததால், அவருடன் பேசுவதை பெண் நிறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் மொபைல் போனில் பெண்ணிடம் தொடர்பு கொண்டு, தன்னை காதலிக்குமாறு அஸ்வின் வற்புறுத்தியுள்ளார்.
மீண்டும் அன்றிரவு, மதுபோதையில் பெண்ணின் வீட்டிற்கு சென்று, தகராறு செய்து மிரட்டியுள்ளார். இதையடுத்து, பெண்ணின் தந்தை அஸ்வின் மீது, செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த செம்பியம் போலீசார், அஸ்வினை நேற்று கைது செய்தனர்.