/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம் அரும்பாக்கத்தில் வாகன ஓட்டிகள் தவிப்பு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம் அரும்பாக்கத்தில் வாகன ஓட்டிகள் தவிப்பு
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம் அரும்பாக்கத்தில் வாகன ஓட்டிகள் தவிப்பு
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம் அரும்பாக்கத்தில் வாகன ஓட்டிகள் தவிப்பு
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம் அரும்பாக்கத்தில் வாகன ஓட்டிகள் தவிப்பு
UPDATED : ஜூன் 04, 2025 06:49 AM
ADDED : ஜூன் 04, 2025 02:37 AM

அரும்பாக்கம்:பூந்தமல்லி நெஞ்சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டு, பெரும் பள்ளம் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் திணறினர். பழைய மழைநீர் வடிகால்வாயில் இருந்து கழிவுநீர் கசிந்து, மழைநீர் வடிகால்வாய் உள்வாங்கியதே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், அமைந்தகரை - கோயம்பேட்டிற்கு செல்லும் பாதை உள்ளது. இப்பகுதியில் உள்ள திருவீதி அம்மன் கோவில் எதிர்புறத்தில், நேற்று முன்தினம் இரவு, சாலையின் நடுவே, பெரிதாக விரிசல் ஏற்பட்டது.
இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் திண்டாடினர்.
தகவல் அறிந்து, அமைந்தகரை போக்குவரத்து போலீசார், உடனடியாக சாலையை பாதிப்பு பகுதியில் தடுப்புகளை அமைத்தனர். நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
கனரக வாகனங்கள் மட்டும், அண்ணா நகர் வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.
நேற்று காலை, விரிசல் ஏற்பட்ட பகுதியை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின், ஜே.சி.பி., இயந்திரத்தால் சாலையை தோண்டிய போது, கான்கிரீட் ரெடிமேட் பாக்ஸ் வைத்து கட்டமைப்கப்பட்ட மழைநீர் வடிகால், 5 அடி பள்ளத்தில் சரிந்து, சாலை உள்வாங்கியது தெரிந்தது. மேலும், அதன் அருகில், கழிவுநீர் கசிந்திருப்பதும் தெரிந்தது. சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வெளியேறும் நீர், அரும்பாக்கம், திருவீதி அம்மன் கோவில் வழியாக, பூந்தமல்லி நெஞ்சாலையை கடந்து கூவத்தில் கலக்கிறது.
அதற்காக, நெடுஞ்சாலையில், போக்கு கால்வாய்க்கு செல்லும் பாதையில், 50 ஆண்டுகள் பழமையான 'ஆர்ச்' வடிவிலாக குழாய் உள்ளது. மழைநீர் வடிகாலுக்கு கீழ் அமைந்துள்ள இக்குழாயில் விரிசல் ஏற்பட்டு, கழிவுநீர் கசிந்து, மண் அறிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், வடிகால் கட்டமைப்பு உள்வாகியதால் சாலை விரிசல் ஏற்பட்டது. அதில், 10 அடிக்கு மேல் பள்ளம் எடுத்து, சீரமைக்கும் பணி நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.