/உள்ளூர் செய்திகள்/சென்னை/தொற்று நோய்க்கு பிறப்பிடமாகும் நிலத்தடி பூங்கா வாகன நிறுத்துமிடமாக மாற்றி அமைக்க கோரிக்கைதொற்று நோய்க்கு பிறப்பிடமாகும் நிலத்தடி பூங்கா வாகன நிறுத்துமிடமாக மாற்றி அமைக்க கோரிக்கை
தொற்று நோய்க்கு பிறப்பிடமாகும் நிலத்தடி பூங்கா வாகன நிறுத்துமிடமாக மாற்றி அமைக்க கோரிக்கை
தொற்று நோய்க்கு பிறப்பிடமாகும் நிலத்தடி பூங்கா வாகன நிறுத்துமிடமாக மாற்றி அமைக்க கோரிக்கை
தொற்று நோய்க்கு பிறப்பிடமாகும் நிலத்தடி பூங்கா வாகன நிறுத்துமிடமாக மாற்றி அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 11, 2024 01:05 AM

வண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, எம்.சி.ரோடு, துலுக்கானத்தம்மன் கோவில் எதிரே பெரிய குளம் இருந்தது. 40 ஆண்டுகளுக்கு முன், அருகில் இருந்த தீயணைப்பு நிலையம், தங்களுக்கு வேண்டிய தண்ணீரை இந்த குளத்தில் இருந்து பயன்படுத்தி வந்தனர்.
பின், தீயணைப்பு நிலையம் தண்டையார்பேட்டைக்கு மாறியதால், குளம் பயன்பாடின்றி போனது. மக்கள் குப்பை கொட்டும் இடமாக இதை பயன்படுத்தி வந்தனர்.
குப்பை மலை போல் தேங்கியதால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, 2005ல் குளத்தை சுத்தம் செய்து மாற்று பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதை தொடர்ந்து, பல லட்சம் ரூபாய் செலவு செய்து குளத்தை, நிலத்தடி பூங்காவாக மாநகராட்சி மாற்றியது.
பூங்கா தரைமட்டத்துக்கு கீழே இருப்பதால் பெண்கள், குழந்தைகள், முதியோர் கீழே இறங்க பயந்தனர்.
நாளடைவில், மக்கள் யாரும் பயன்படுத்தாததால், சமூக விரோதிகளின் கூடாரமாக பூங்கா மாறியது.
இதனால், பூங்காவுக்கு மாநகராட்சி பூட்டு போட்டுவிட்டது. தற்போது பூங்காவிற்குள் மக்களுக்கு அனுமதி இல்லை.மக்களுக்கு பயன்படாததால், பூங்காவை ஒட்டியுள்ள நடைபாதையை சுற்றிலும், சிறுகடை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், பூங்கா இருப்பதே பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.கடந்த சில மாதங்களாக, பரவலாக பெய்த மழையால் நிலத்தடி பூங்காவில் கழிவுகளுடன் மழைநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதனால் தொற்று நோய்க்கு பிறப்பிடமாக நிலத்தடி பூங்கா மாறி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
எனவே பூங்காவை சீரமைத்து, நெரிசல் மிகுந்த எம்.சி.ரோடில் பயன்பாடின்றி உள்ள நிலத்தடி பூங்காவை, வாகன நிறுத்துமிடமாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.