/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரயிலில் 13 கிலோ கஞ்சா கடத்தியவர் கைதுரயிலில் 13 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
ரயிலில் 13 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
ரயிலில் 13 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
ரயிலில் 13 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
ADDED : பிப் 06, 2024 12:34 AM
சென்னை,சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் மாலை, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மேற்கு வங்க மாநிலம் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு, கோரமண்டலம் விரைவு ரயில் வந்தது.
இந்த ரயிலில் வந்த பயணியரை கண்காணித்தனர்.
அதில் ஒருவர் மீது, போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார்.
அவரது பையை திறந்து பார்த்த போது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவரை ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் அவர், சென்னை கொளத்துாரைச் சேர்ந்த ஜெயசூர்யா, 24, என்பதும், விசாகப்பட்டினத்தில் இருந்து ரயிலில், 2.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 13 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து, அவரை ரயில்வே போலீசார் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.