ADDED : ஜன 06, 2024 12:12 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றித் திரிவதால், விபத்து மற்றும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், மாடு பிடிக்கும் பணியை தினமும் மேற்கொள்ள, நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஒப்பந்ததாரர்கள் மூலம், 10 ஊழியர்கள் உடைய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள், அதிகாரிகள் தெரிவிக்கும் பகுதிக்கு வாகனத்துடன் சென்று, சாலையில் திரியும் மாடுகளை பிடிப்பர்.
அவற்றை, சிங்கப்பெருமாள் கோவில் அருகேஉள்ள கொண்டமங்கலம் ஊராட்சி கோசாலையில் அடைப்பர்.
மாட்டு உரிமையாளர்கள் உரிய அபராதம் செலுத்திய பின், மாடுகள் விடுவிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.