ADDED : ஜன 05, 2024 12:28 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி கமிஷனரை கண்டித்து, ம.ம.க., சார்பில் நேற்று முன்தினம், தாம்பரத்தில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு, போலீசார் அனுமதி வழங்கவில்லை.
அதை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியோருக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பதற்றமான சூழல் உருவானது. அவர்களை கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்து, இரவு விடுவித்தனர்.
இந்த விவகாரத்தில், 329 பேர் மீது, இரண்டு பிரிவுகளின் கீழ், தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.