/உள்ளூர் செய்திகள்/சென்னை/மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் 8,567 மனுக்கள் பெறப்பட்டனமக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் 8,567 மனுக்கள் பெறப்பட்டன
மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் 8,567 மனுக்கள் பெறப்பட்டன
மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் 8,567 மனுக்கள் பெறப்பட்டன
மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் 8,567 மனுக்கள் பெறப்பட்டன
ADDED : ஜன 13, 2024 12:18 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில், 8,567 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
தாம்பரம் மாநகராட்சியில், ஜன., 3 முதல், ஜன., 12ம் தேதி வரை, மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு, வர்த்தக உரிமம், சொத்து வரி, திடக்கழிவு மேலாண்மை, தொழில் வரி, புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம், பட்டா உள்ளிட்ட சேவைகளுக்காக, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. அந்த வகையில், 8,567 மனுக்கள் பெறப்பட்டன. இதில் பல மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டன.