/உள்ளூர் செய்திகள்/சென்னை/ துாய்மை பணியாளர் மீது சரமாரியாக தாக்குதல் காரில் தி.மு.க., கொடியுடன் வந்த 7 பேர் கைது துாய்மை பணியாளர் மீது சரமாரியாக தாக்குதல் காரில் தி.மு.க., கொடியுடன் வந்த 7 பேர் கைது
துாய்மை பணியாளர் மீது சரமாரியாக தாக்குதல் காரில் தி.மு.க., கொடியுடன் வந்த 7 பேர் கைது
துாய்மை பணியாளர் மீது சரமாரியாக தாக்குதல் காரில் தி.மு.க., கொடியுடன் வந்த 7 பேர் கைது
துாய்மை பணியாளர் மீது சரமாரியாக தாக்குதல் காரில் தி.மு.க., கொடியுடன் வந்த 7 பேர் கைது
ADDED : மே 18, 2025 03:46 AM

சென்னை:ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அருண்மாலிக், 50. இவர், சென்னை மாநகராட்சியில் துாய்மை பணி மேற்கொள்ளும் 'உர்பேசர் சுமித்' நிறுவனத்தில் மெக்கானிக் ஸ்வீப்பர் லாரியில் பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் இரவு, ஓ.எம்.ஆர்., டைடல் பார்க் சந்திப்பில், சாலையில் உள்ள மண்ணை மெக்கானிக் ஸ்வீப்பர் வாகனம் வாயிலாக அகற்றி கொண்டிருந்தார்.
இரவு நேரத்தில், டைடல் பார்க் சந்திப்பு மேம்பாலம் தடுப்பு வைத்து மூடப்படும். நேற்று அதிகாலை 2:30 மணிக்கு, மேம்பால சாலையை சுத்தம் செய்ய, தடுப்பை அகற்றி மெக்கானிக் ஸ்வீப்பர் லாரியை உள்ளே கொண்டு சென்றனர்.
பின், வாகனங்கள் வராத வகையில், தடுப்பு வைத்து மூடினர். அப்போது, திருவான்மியூரில் இருந்து டைடல் பார்க் நோக்கி, டிஎன்: 49 ஏசி 2092 எண் கொண்ட ஸ்கார்பியோ கார் வந்தது. அதில், தி.மு.க.. கொடி கட்டப்பட்டு இருந்தது.
காரில், 7 ஆண்கள், இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
'தடுப்பை திறந்துவிடு' என, கார் ஓட்டுநர் விஜயகுமார், 28, கூறியுள்ளார். 'மேம்பாலம் வழியாக இரவில் செல்ல அனுமதி இல்லை; சாலை வழியாக செல்லுங்கள்' என, அருண்மாலிக் கூறியுள்ளார்.
இதில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காரில் இருந்தவர்கள், அருண்மாலிக்கை சரமாரியாக தாக்கினர். அதை தட்டிக்கேட்ட, தரமணியை சேர்ந்த இளைஞர்களையும் தாக்கியுள்ளனர்.
காயமடைந்த அருண்மாலிக், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின்படி, தரமணி போலீசார், நேற்று கோடம்பாக்கத்தை சேர்ந்த விஜயகுமார், 26, திவாகர், 25, உள்ளிட்ட 7 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது.