சோழிங்கநல்லுாரில் 7 நவீன மயானங்கள்
சோழிங்கநல்லுாரில் 7 நவீன மயானங்கள்
சோழிங்கநல்லுாரில் 7 நவீன மயானங்கள்
ADDED : பிப் 12, 2024 01:52 AM
சோழிங்கநல்லுார்:இ.சி.ஆர்., மற்றும் ஓ.எம்.ஆர்., பகுதியை உள்ளடக்கிய, சோழிங்கநல்லுார் மண்டலத்தில், ஒன்பது வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும், நவீன மயானம் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது.
இதன்படி, இ.சி.ஆர்., பகுதிக்கு உட்பட்ட, 194வது வார்டு, ஹரிச்சந்திரா சாலையில் உள்ள மயானம், 25 லட்சம் ரூபாயில் நவீனப்படுத்தி, 2022ம் ஆண்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டது. 192, 197 ஆகிய வார்டுகளில் இடம் இல்லாததால், மயானம் அமைக்க முடியவில்லை.
ஓ.எம்.ஆரில், 200வது வார்டு, செம்மஞ்சேரியில், 1.35 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மயானம், கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. 196, 199 ஆகிய வார்டுகளில், 2.70 கோடி ரூபாயில், பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 193, 195, 198 ஆகிய வார்டுகளில், நவீன மயானம் அமைக்க, 4.05 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்காக பணி, ஓரிரு நாளில் துவங்கப்பட உள்ளது என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.