/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 7 மணி நேரம் மின் தடை ஓ.எம்.ஆரில் அவதி 7 மணி நேரம் மின் தடை ஓ.எம்.ஆரில் அவதி
7 மணி நேரம் மின் தடை ஓ.எம்.ஆரில் அவதி
7 மணி நேரம் மின் தடை ஓ.எம்.ஆரில் அவதி
7 மணி நேரம் மின் தடை ஓ.எம்.ஆரில் அவதி
ADDED : ஜூன் 04, 2025 12:16 AM
துரைப்பாக்கம் ' ஓ.எம்.ஆர்., மேட்டுக்குப்பம், வி.பி.ஜி., அவென்யூ பிரதான சாலை மற்றும் விரிவு, சி.பி.எஸ்., நகர் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட தெருக்களில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று பிற்பகல் 3:00 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. இரவு, 11:00 மணி வரை மின் விநியோகம் சீராகவில்லை.
துணை மின் நிலைய பொறியாளர்களை தொடர்பு கொண்ட போது, அவர்கள் போனை எடுக்கவில்லை. இதனால், யாரிடம் புகார் அளிப்பது என தெரியாமல் மக்கள் திணறினர்.
மழைநீர் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டிபோது, கேபிள் துண்டிக்கப்பட்டதால், மின் விநியோகம் தடைபட்டதாக கூறப்படுகிறது. மின்தடை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.