/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வெளிநாட்டு சிகரெட் குட்கா கடத்திய 6 பேர் கைது வெளிநாட்டு சிகரெட் குட்கா கடத்திய 6 பேர் கைது
வெளிநாட்டு சிகரெட் குட்கா கடத்திய 6 பேர் கைது
வெளிநாட்டு சிகரெட் குட்கா கடத்திய 6 பேர் கைது
வெளிநாட்டு சிகரெட் குட்கா கடத்திய 6 பேர் கைது
ADDED : ஜூன் 04, 2025 12:14 AM

சென்னை,ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சேர்ந்தவர் அப்துல் ரவாப், 35. அதே மாவட்டம், புதுப்பட்டினத்தைச் சேர்ந்தவர் முகமது அஸ்வர், 44.
இவர்கள், திருவல்லிக்கேணி தாயார் சாகிப் தெருவில், சட்ட விரோதமாக வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் இ - சிகரெட்டுகளை பதுக்கி வைத்திருந்தனர்.
இவர்களை, திருவல்லிக்கேணி போலீசார் நேற்று கைது செய்து, சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மெரினா கடற்கரையில் மாவா விற்ற இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரஜ்வல்குமார், 27, அரும்பாக்கத்தைச் சேர்ந்த முருகன், 32, ஆகிய இருவரும், ஆந்திராவில் இருந்து ஆட்டோவில் குட்கா பொருட்களை கடத்தி வந்துள்ளனர்.
இவர்களை, சூளைமேடு போலீசார் நேற்று கைது செய்து, 15 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.