பணம் வைத்து சூதாட்டம் 5 பேர் கைது
பணம் வைத்து சூதாட்டம் 5 பேர் கைது
பணம் வைத்து சூதாட்டம் 5 பேர் கைது
ADDED : மே 20, 2025 01:46 AM
சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை, பாரதி நகர், முனுசாமி தெருவில் உள்ள ஒரு வீட்டில், பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, சைதாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் இரவு, அந்த வீட்டை சோதனை செய்தபோது, ஐந்து பேர் பணம் வைத்து, சீட்டுக்கட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
விசாரணையில், ரவி, 50, ஜவஹர்பாஷா, 44, கோபிநாத், 45, செல்வம், 42, பாபு, 45, என, தெரிந்தது.
அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 4,400 ரூபாய் மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.