/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாங்காடு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் 4ம் ஆண்டு முத்தமிழ் வளர்ச்சி போட்டிமாங்காடு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் 4ம் ஆண்டு முத்தமிழ் வளர்ச்சி போட்டி
மாங்காடு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் 4ம் ஆண்டு முத்தமிழ் வளர்ச்சி போட்டி
மாங்காடு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் 4ம் ஆண்டு முத்தமிழ் வளர்ச்சி போட்டி
மாங்காடு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் 4ம் ஆண்டு முத்தமிழ் வளர்ச்சி போட்டி
ADDED : ஜன 31, 2024 12:09 AM

குன்றத்துார், மாங்காடு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் 4ம் ஆண்டு முத்தமிழ் வளர்ச்சி போட்டியில் வென்றவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டன.
சென்னை, மாங்காட்டில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி அமைந்துள்ளது. இங்கு, தமிழ்த் துறையின் சுந்தரத்தமிழ் மன்றம் நடத்தும், நான்காம் ஆண்டு முத்தமிழ் வளர்ச்சி போட்டிகள், நேற்று முன்தினம் நடந்தன.
ஐந்து நிலைகளில் மாணவர்களின் தமிழாற்றலை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகள் நடந்தன. இதில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து 15க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இதன் பரிசளிப்பு விழாவிற்கு, மாங்காடு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி செயலரும், முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனருமான பெருமாள்சாமி தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக, இந்திய தோல்பொருள் ஏற்றுமதிக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் செல்வம் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, சிறப்புரை யாற்றினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.