/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போதை மாத்திரை விற்ற 4 வாலிபர்கள் சிக்கினர் போதை மாத்திரை விற்ற 4 வாலிபர்கள் சிக்கினர்
போதை மாத்திரை விற்ற 4 வாலிபர்கள் சிக்கினர்
போதை மாத்திரை விற்ற 4 வாலிபர்கள் சிக்கினர்
போதை மாத்திரை விற்ற 4 வாலிபர்கள் சிக்கினர்
ADDED : ஜூன் 20, 2025 12:17 AM
மடிப்பாக்கம்,பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் எல்லைப் பகுதியில், மடிப்பாக்கம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் பைக்கில் வந்த நபரை மடக்கி சோதனையிட்டனர்.
அவரிடம், டைடால் எனும் வலி நிவாரணி மாத்திரை இருப்பது கண்டறியப்பட்டது. அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், அவர் கண்ணகி நகர் அடுத்த எழில் நகரை சேர்ந்த சரவணன், 25, என்பது தெரியவந்தது.
பெங்களூருவில் இருந்து டைடால் மாத்திரைகளை வாங்கி வந்து, பள்ளிக்கரணை, மேடவாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அவரிடம் இருந்த, 160 டைடால் மாத்திரைகள், நான்கு மொபைல் போன்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின், அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
அதேபோல், கண்ணகி நகர் பகுதியில், இளைஞர்களிடம் வலி நிவாரண மாத்திரைகளை போதை மருந்தாக விற்பனை செய்த, கண்ணகி நகரை சேர்ந்த அருண், 33, பிரேம்குமார், 23, பிரகாஷ், 26, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 1,300 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.