/உள்ளூர் செய்திகள்/சென்னை/கத்தி முனையில் மாமூல் வாங்கிய 4 பேர் கைதுகத்தி முனையில் மாமூல் வாங்கிய 4 பேர் கைது
கத்தி முனையில் மாமூல் வாங்கிய 4 பேர் கைது
கத்தி முனையில் மாமூல் வாங்கிய 4 பேர் கைது
கத்தி முனையில் மாமூல் வாங்கிய 4 பேர் கைது
ADDED : ஜன 11, 2024 01:20 AM
தாம்பரம், மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. நேற்று முன்தினம் இரவு, வீட்டின் வெளியே, மகன் யுவராஜ் மற்றும் சூர்யா ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கும்பல், 'நாங்கள் பெருங்களத்துாரைச் சேர்ந்த ரவுடிகள்' எனக் கூறி, கத்திமுனையில் பாக்கியலட்சுமியின் விலையுயர்ந்த மொபைல் போனை பறித்து சென்றனர்.
மேலும், இனி ஏரியாவில் அனைவரும் மாமூல் கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டி சென்றனர். இது குறித்து, தாம்பரம் போலீசார் விசாரித்தனர்.
இதில், பெருங்களத்துாரைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்கிற சந்துரு, 22, சரண்குமார், 21, புவனேஷ், 22, ஆனந்த் என்கிற அகில், 21, ஆகிய நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.