/உள்ளூர் செய்திகள்/சென்னை/கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 310 பேர் 2 மாதத்தில் கைதுகஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 310 பேர் 2 மாதத்தில் கைது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 310 பேர் 2 மாதத்தில் கைது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 310 பேர் 2 மாதத்தில் கைது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 310 பேர் 2 மாதத்தில் கைது
ADDED : பிப் 06, 2024 12:45 AM
சென்னை,
கஞ்சா புழக்கத்தை அடியோடு ஒழிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை போலீசார் இரண்டு மாதத்தில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால், 176 வழக்குகள் பதிவு செய்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 310 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில், வெவ்வேறு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த, 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 623 கிலோ கஞ்சா, 20 கஞ்சா சாக்லெட், 8,344 போதை மாத்திரைகள், 77 மொபைல்போன்கள், 9.50 லட்சம் ரூபாய் ரொக்கம், 36 இருசக்கர வாகனங்கள், 10 மூன்று சக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், கடந்த இரண்டு மாதத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த, 104 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், குட்கா விற்பைனை தொடர்பாக, 373 வழக்குகள் பதிவு செய்து, 432 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 3915 கிலோ குட்கா, 125 கிலோ மாவா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து 3.60 லட்சம் ரூபாய், போதை பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 18 இருசக்கர வாகனங்கள், இரண்டு ஆட்டோ, ஆறு நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபடுவோரை களையெடுப்பதோடு, அவற்றிற்கு துணைப்போகும் போலீசார் மீதும் கடும் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.