/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வெளிநாடுகளுக்கு கடந்த முயற்சி 211 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் வெளிநாடுகளுக்கு கடந்த முயற்சி 211 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
வெளிநாடுகளுக்கு கடந்த முயற்சி 211 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
வெளிநாடுகளுக்கு கடந்த முயற்சி 211 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
வெளிநாடுகளுக்கு கடந்த முயற்சி 211 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
ADDED : மார் 21, 2025 12:29 AM

சென்னை, வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக ஆட்டோவில் கொண்டுசெல்லப்பட்ட, 211 நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை, ராஜாஜி சாலை ரிசர்வ் வங்கி அருகே நேற்று காலை, கோட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்திற்கு இடமாக வந்த பயணியர் ஆட்டோவை நிறுத்தி, சோதனை செய்தனர்.
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த யாசின், 50 என்பவர், மண்ணடியிலிருந்து, 211 நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்ததும், விமானம் வாயிலாக வெளிநாடுகளுக்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, யாசினையும், ஆமைகளையும் போலீசார், வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.